தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் பாடல் வரிகள்
Movie | Sri Murugan | ||
---|---|---|---|
படம் | ஸ்ரீ முருகன் | ||
Music | S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman | ||
Lyricist | Papanasam Sivan | ||
Singers | U. R. Jeevarathinam | ||
Year | 1946 |
பெண் : தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் போல
தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் போல
திக்குத் திசைத் தெரியாமல் தேவர்கள் எல்லாம்
திக்குத் திசைத் தெரியாமல் தேவர்கள் எல்லாம்
சிதறி ஓட கடும்புயல் போல் உயிர்களையெல்லாம்
சிதறி ஓட கடும்புயல் போல் உயிர்களையெல்லாம்
சித்ரவதை செய்து உலகை சுற்றித் திரிந்தான்
சித்ரவதை செய்து உலகை சுற்றித் திரிந்தான்
சூரன் சுற்றித் திரிந்தான்……
பெண் : காப்பதற்கொரு வழியில்லையோ
கடவுளுமில்லையோ
காப்பதற்கொரு வழியில்லையோ
கடவுளுமில்லையோ
என்று கதறி என்னிடம் முறையிட
மனம் கலங்கி அவருடன்
கதறி என்னிடம் முறையிட
மனம் கலங்கி அவருடன்
கண்ணாயிரமும் மறைத்து மூங்கில் கன்றுகளாக
கண்ணாயிரமும் மறைத்து மூங்கில் கன்றுகளாக
கலந்து இந்திரன் மறைந்திருந்த சீர்காழியை அடைந்தேன்
சீர்காழியை அடைந்தேன்
பெண் : அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான்
அன்பர் தொழும் மெய்யான பண்டிதன் அனந்தம்
அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான்
அன்பர் தொழும் மெய்யான பண்டிதன் அனந்தம்
அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான் ஆ…ஆ…ஆ…
ஒருநாள் சித்தர அரண் அருள் கிடைத்த பரிசான
பெண் : தெய்வீக அருங்கனியுடன் கயிலை சேர்ந்தேன்……
சித்தர அரண் அருள் கிடைத்த பரிசான
தெய்வீக அருங்கனியுடன் கயிலை சேர்ந்தேன்……